ஆந்திரம் மாநில முன்னாள் பாஜக தலைவர் மறைவு: துணை குடியரசுத் தலைவர் இரங்கல்

ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில முன்னாள் பாஜக தலைவராக இருந்த சிலகம் ராமச்சந்திர ரெட்டி (85) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 
சிலகம் ராமச்சந்திர ரெட்டி
சிலகம் ராமச்சந்திர ரெட்டி

திருத்தணி: ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில முன்னாள் பாஜக தலைவராக இருந்த சிலகம் ராமச்சந்திர ரெட்டி (85) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

சித்துார் மாவட்டம், நகரி அடுத்த விஜயபுரம் பகுதியில், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலகம் ராமச்சந்திர ரெட்டி. இவர் கடந்த, 1936 -ஆம் ஆண்டு செப்.10 இல் பிறந்தவர். கடந்த,1959 -ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ராமச்சந்திர ரெட்டி ஏழு கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.

மேலும், 1975 இல் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் இயக்கத்தில் சேர்ந்தார். பின், 1980 இல் பிச்சாட்டூர் ஒன்றிய தலைவர் பதவி வகித்தார். நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஜனதா கட்சி சார்பில், 1978 -ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 1999 -ஆம் ஆண்டு முதல், 2004 -ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில பாஜக தலைவராக இருந்தார்.  

ராயல்சீமா பகுதி மக்களுக்கு விவசாயம், குடிநீர் வசதிக்காக, திருப்பதியில் இருந்து கர்னுால் வரை 1,053 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். மாநில பாஜக தலைவராக இருந்த போது பல்வேறு போராட்டங்கள் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். 

கடந்த, 2008 -ஆம் ஆண்டு திருப்பதியில் இருந்து கர்னுால் வரை ரதயாத்திரை மேற்கொண்டார். கடந்தாண்டு பிரதமர் மோடி திருப்பதிக்கு வந்த போது, ராமச்சந்திர ரெட்டியை நேரில் அழைத்து உடல் நலம் விசாரித்தார். 

இந்நிலையில் ராமச்சந்திர ரெட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். சனிக்கிழமை மாலையில் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரரெட்டி இறந்தார். தொடர்ந்து ராமச்சந்திரரெட்டியின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்து, மாலையில் அடக்கம் செய்தனர். 

இவரது மறைவுக்கு நகரி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஜா, முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜூ மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநில தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார். 

இறந்த ராமச்சந்திர ரெட்டிக்கு ஈஸ்வரபிரசாத்(57) என்ற மகனும், மருத்துவர் தாட்சாயினி(50), மாதவி(45) என்ற இருமகள்கள் உள்ளார். 

துணை குடியரசுத் தலைவர் இரங்கல்:  முன்னாள் பாஜக தலைவர் ராமச்சந்திர ரெட்டி மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரை பக்க பதிவி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,  நானும், ராமச்சந்திர ரெட்டியும் மாநில அளவில் மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். என்மீது மிகவும் அன்பு செலுத்துக்கூடிய பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com