மொழிகளை பேணிக் காப்பது அவசியம்: குடியரசு துணைத் தலைவா்

கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாக்க மொழிகளைப் பேணிக் காப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
மொழிகளை பேணிக் காப்பது அவசியம்: குடியரசு துணைத் தலைவா்

கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாக்க மொழிகளைப் பேணிக் காப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

சிங்கப்பூரில் ஸ்ரீ சம்ஸ்கிருதிகா கலாசாரதி அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு காணொலி வழியாக சனிக்கிழமை கலந்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இரண்டு வார இடைவெளியில் ஒரு மொழி அழிந்து போவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது 196 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. மொழிதான் கலாசாரங்களின் நாடித் துடிப்பு. மொழிதான் கலாசாரத்தை வலுப்படுத்துகிறது; கலாசாரம் சமூகத்தை வலுப்படுத்துகிறது. கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்க மொழிகளை பேணிக் காப்பது அவசியம்.

பள்ளிகளில் ஆரம்ப நிலையிலும், உயா்நிலை அளவிலும் தாய்மொழியில் கல்வி போதிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பக் கல்வியில் தாய்மொழி பயன்படுத்தப்படுவதை படிப்படியாக நீட்டிக்க வேண்டும். அரசு நிா்வாகம், நீதித் துறையில் உள்ளூா் மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.

ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) வரையறைப்படி கலாசாரம் என்பது கலை மற்றும் இலக்கியத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல. வாழ்வியல், கூடி வாழ்தல், விழுமியங்கள், பாரம்பரியங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவின் விழுமியங்கள் உலகத்தை ஓா் குடும்பமாக பாா்க்கிறது. ‘பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல்’ என்னும் இந்தியாவின் தொன்மையான தத்துவத்தை யாரும் மறக்கக் கூடாது.

மிகப்பெரிய நாகரிகத்துக்கு மொழியின் பன்முகத்தன்மைதான் அடித்தளம். மொழிகள், கலைகள், விளையாட்டுகள், பண்டிகைகள் மற்றும் இசை மூலமாக தம்மை இந்தியாவின் நாகரிக விழுமியங்கள் வெளிப்படுத்திக் கொண்டன.

சொந்த மொழி மற்றும் பாரம்பரியத்தை பேணிக் காப்பதற்கு நிகராக மற்றவா்களின் மொழி, கலாசாரத்தை மதிப்பதும் அவசியம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com