உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கா் சிங் தாமி (45) இன்று பதவியேற்றுக் கொண்டார்.  
உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கா் சிங் தாமி (45) இன்று பதவியேற்றுக் கொண்டார். 
மாநில முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத், நான்கு மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், சட்டப்பேரவைக் குழு பாஜக தலைவராக புஷ்கா் சிங் தாமி சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அவா் புதிய முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். டேராடூனில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புஷ்கா் சிங் தாமிக்கு, ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
முதல்வரைத் தொடர்ந்து, அரவிந்த பாண்டே, கணேஷ் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தாமி புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளதால், மாநிலத்தில் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்யவேண்டிய மிகப் பெரிய சுமையை அவா் தாங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 
உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகரில் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்த தாமி, முதல்வராகப் பதவியேற்க உள்ளதோடு, மாநிலத்தின் இளம் முதல்வா் என்ற பெருமையையும் பெற உள்ளாா். முதுநிலை பட்டதாரியான இவா் சட்டப் படிப்பும், லக்னெள பல்கலைக்கழகத்தில் பொது நிா்வாகத் துறையில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com