மகாராஷ்டிர பேரவை: 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டிற்கு இடைநீக்கம்

மகாராஷ்டிர பேரவையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தகாத வார்த்தைகளில் பேசிய 12 பாஜக உறுப்பினர்கள் ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர பேரவை: 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டிற்கு இடைநீக்கம்

மகாராஷ்டிர பேரவையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தகாத வார்த்தைகளில் பேசிய 12 பாஜக உறுப்பினர்கள் ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமலியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். 

இந்நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கடும் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, அமலியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆஷிஷ் ஷெலார், பராக் அல்வானி, அதுல் பட்கல்கர், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, ஹரிஷ் பிம்பலே, அபிமன்யு பவார், ஜெய்குமார் ராவல், கீர்த்திகுமார் பாங்டியா, கிரிஷ் மகாஜன், ராம் சத்புட் மற்றும் சஞ்சய் குட் ஆகிய 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவ் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர பேரவைத் தலைவர் ராஜிநாமா நானோ படேல் செய்யப்பட்டதையடுத்து தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com