விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணி தொடங்கும்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உறுதி

மேக்கேதாட்டு கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டுமானம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உறுதி
விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டுமானம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உறுதி

மேக்கேதாட்டு கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசு இதனைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தில்லி சென்றுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து  மேக்கேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என்று ஷெகாவத் கூறியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, “மேக்கேதாட்டு அணை விவகாரம் கர்நாடகத்திற்கு சாதகமாகவே உள்ளது. சட்டப்படி மேக்கேதாட்டு அணை கட்டுமானத்தை மாநில அரசு தொடங்கும். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனினும் தமிழ்நாடு அரசிடமிருந்து உரிய பதில் வரவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com