மும்பை: 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் போராட்டம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மும்பை: 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் போராட்டம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாஸ்கர் ஜாதவ் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பு வகித்தார். 

இந்தக் கூட்டத்தில் ஜாதி ரீதியிலான ஒடஒதுக்கீடுகளில் உச்சநீதிமன்றம் விதித்திருந்த 50 சதவிகித உச்சவரம்பை நீக்குவதற்கு அரசியல் சாசன சட்டத் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இதற்கு முன்னதாக மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமலியில் ஈடுபட்டனர். 

மேலும், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் அவரை  தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கடும் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 12 பேரை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று அவர்கள் மாநில ஆளுநரையும் சந்தித்து ஆதரவு கோரினர். 

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com