
சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை
சுற்றுலாத் தலங்களில் கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் கரோனா நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரி வி.கே.பால் பேசுகையில்,
நாட்டில் புதிய அபாயம் எழுந்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் கூட்டம் கூட்டமாக முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் மக்கள் செல்வது கவலை ஏற்படுத்துகிறது.
மேலும், கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நெறிமுறைகளை மத்திய அமைச்சகம் வழங்கியுள்ளது. மூன்று தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்த அங்கிகரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியமானது.
இந்தியாவில் லாம்டா வகை கரோனா அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.