இந்த ஆண்டும் பக்தர்களின்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறும் என்று ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இந்த ஆண்டும் பக்தர்களின்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
இந்த ஆண்டும் பக்தர்களின்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை


புரி: ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறும் என்று ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பேரிடர் காலம் என்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்று ரதத்தை இழுக்கும் கோயில் ஊழியர்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிமணி கட்டுரையைப் படிக்க.. மக்களின் காவலன் புரி ஜகந்நாதர்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஜூலை 12ஆம் தேதி பக்தர்களின்றி நடைபெறும். உச்ச நீதிமன்ற மற்றும் ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும். ரத யாத்திரையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரத யாத்திரையில் பங்கேற்கும் கோயில் ஊழியர்களும், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்களாகவும், கரோனா இல்லை என்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

 காவல்துறையினர் அல்லாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் மற்றும் கோயில் ஊழியர்கள் ரத யாத்திரையில் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு புரி கோயிலைச் சுற்றி நான்கு இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜூலை 8ஆம் தேதி முதல் நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com