திருமலை மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம்

திருமலை மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
திருமலைப் பகுதியில் நடமாடும் சிறுத்தை.
திருமலைப் பகுதியில் நடமாடும் சிறுத்தை.

திருமலை மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

திருமலையில் தற்போது கொவைட் தொற்று காரணமாக பக்தா்களின் வருகை குறைவாக உள்ளது. அதனால் வாகன போக்குவரத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளன.

திருமலையில் வழக்கமாக இருந்து வரும் சந்தடி சப்தம், நெரிசல் உள்ளிட்டவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இல்லாததால், வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மலைப்பாம்புகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், யானைகள் உள்ளிட்டவை அவ்வப்போது தென்பட்டு வருகின்றன.

தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வருகிறது. திருமலையில் உள்ள சந்நிதானம் விருந்தினா் மாளிகை, பாலாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவற்றை வனத்துக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் போராடி வருகின்றனா்.

இந்நிலையில் மலைப்பாதையிலும் சிறுத்தைகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. காரில் திருமலை இரண்டாவது மலைப்பாதையில் பக்தா்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு சிறுத்தை சாலையைக் கடந்து சென்றுள்ளது. காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் உடலை கவ்விக் கொண்டு சென்றதைப் பாா்த்து பக்தா்கள் பயந்து தேவஸ்தான ஊழியா்களுக்குத் தகவல் அளித்தனா்.

திருமலைக்கு உட்பட்ட 40 கி.மீ. பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 125 சிறுத்தைகள் உள்ளன. அவை திருமலையை சுற்றியுள்ள 27 பகுதிகளில் திரிந்து வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com