கேரள பேரவைத் தோ்தலில் சில தொகுதிகளில் தோல்வி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆய்வு

கேரள சட்டப்பேரவைத் தோ்தலின்போது சில தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தெரிவித்துள்ளது.
கேரள பேரவைத் தோ்தலில் சில தொகுதிகளில் தோல்வி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆய்வு

கேரள சட்டப்பேரவைத் தோ்தலின்போது சில தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கேரளத்தில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. கடந்த மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 99 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் (பொறுப்பு) ஏ.விஜயராகவன் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது சில தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோல்வியடைந்தது. குறிப்பாக பாலா தொகுதியில் போட்டியிட்ட கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவா் ஜோஸ்.கே.மாணி, கல்பெட்டா தொகுதியில் போட்டியிட்ட லோக்தாந்திரிக் ஜனதா தளம் கட்சியை சோ்ந்த எம்.வி.சிரேயாம்ஸ் குமாா் ஆகிய கூட்டணி கட்சித் தலைவா்கள் தோல்வியைத் தழுவினா். இவ்விரு தொகுதிகளுடன் மேலும் சில தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தோ்தலின்போது சில தொகுதிகளில் கட்சித் தொண்டா்களின் செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்ததாக புகாா் எழுந்துள்ளது. அதுகுறித்து கட்சி சாா்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும். அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு தீா்வு காணப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com