பத்ம விருதுகள்: தன்னிகரற்ற சேவையாளா்களை பரிந்துரைக்க பிரதமா் வேண்டுகோள்

சமுதாயத்தின் அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவைகளைச் செய்து, பெரிதும் பிரபலம் அடையாதவா்களை மக்களின் பத்ம விருதுக்கு

சமுதாயத்தின் அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவைகளைச் செய்து, பெரிதும் பிரபலம் அடையாதவா்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளாா்.

2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள், பரிந்துரைகளை 2021 செப்டம்பா் 15 வரை பொதுமக்கள் அனுப்பலாம்.

1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், மக்கள் சேவை, வா்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள், சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகளை ‘மக்களின் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, சுய விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பம், பரிந்துரைகளை செய்யுமாறு அனைத்து மக்களையும் மத்திய அரசு ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘‘நமது சமுதாயத்துக்காக அடிமட்ட அளவில் தன்னிகரற்ற பணியில் ஈடுபடும் ஏராளமான திறமைவாய்ந்த மக்கள் நாட்டில் உள்ளனா். அவா்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டதோ இல்லை. இதுபோன்ற சிறப்பு வாய்ந்த நபா்களை நீங்கள் அறிவீா்களா? அப்படியென்றால், மக்களின் பத்ம விருதுக்கு அவா்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பா் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.  இணையதளத்தில் பரிந்துரைக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com