டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமில்லை: ப.சிதம்பரம்

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக  காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக  காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

தில்லி, ஒடிஸா போன்ற மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்பது வெற்றுப் பெருமை. 

கரோனா தடுப்பூசி குறித்த உண்மைகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com