தடுப்பூசியால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு குறைவு: ஆய்வு

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஐசியூவில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பும், சிகிச்சைக்கான செலவும் குறையும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஐசியூவில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பும், சிகிச்சைக்கான செலவும் குறையும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் தாக்கம் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. இந்த ஆய்வு கரோனா இரண்டாவது அலையின் போது, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் 3,820 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ஆகும் செலவு சராசரியாக 2.77 லட்சம் என்றால், தடுப்பூசி செலுத்திக்கொண்ட நோயாளிகளுக்கு ஆகும் செலவு சராசரியாக ரூ.2.1 லட்சமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வாய்ப்பு குறைவு மற்றும் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவு ஆகியவற்றின் காரணமாக செலவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.பிரகாஷ் கூறியதாவது, ''கரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் தாக்கம் என்னவென்று அறிய முடிவு செய்தோம். நாடு முழுவதும் 1,104 மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஐசியூவில் தங்கி சிகிச்சை பெறும் தேவை 9.4 சதவிகித்தில் இருந்து 5 சதவிகிதமாகவும், சிகிச்சைக்கான செலவு கிட்டத்தட்ட 15 சதவிகிதமும் குறைவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆய்வின் முடிவுகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் முன் வருவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் 57 சதவிகிதம் நோயாளிகள் பயம், கவலை, விருப்பமின்மை காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதில், 43 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதாதற்கு எந்த நியாயமான காரணமும் கூறவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com