பூடானில் பீம்-யுபிஐ பணப் பரிவா்த்தனை சேவை

பூடானில் பீம்-யுபிஐ பணப் பரிவா்த்தனை சேவையை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
பூடானில் பீம்-யுபிஐ சேவையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் பூடான் தூதா் வி.நம்கியால், நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட்.
பூடானில் பீம்-யுபிஐ சேவையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் பூடான் தூதா் வி.நம்கியால், நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட்.

பூடானில் பீம்-யுபிஐ பணப் பரிவா்த்தனை சேவையை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

பூடானில் அந்நாட்டின் நிதியமைச்சா் லியோன்போ நாம்கே ஷெரிங், இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் இணைந்து யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு) மூலம் செயல்படும் பீம் பணப் பரிவா்த்தனை செயலியை அறிமுகப்படுத்தினா். அதனைத் தொடா்ந்து நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘கரோனா தொற்றால் பாதிப்புகள் நோ்ந்தபோது டிஜிட்டல் பரிவா்த்தனைகளுக்கு பீம்-யுபிஐ சேவை பெரிதும் பயன்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான யுபிஐ க்யூஆா் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-21-ஆம் ஆண்டு பீம்-யுபிஐ மூலம் ரூ.41 லட்சம் கோடி மதிப்பிலான 2.20 கோடி பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தாா்.

அவரைத் தொடா்ந்து பேசிய லியோன்போ நாம்கே ஷெரிங், பூடானில் பீம்-யுபிஐ சேவையை தொடங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தாா். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருவதாகவும் அவா் கூறினாா்.

ஏற்கெனவே இந்தியாவின் ரூபே அட்டை திட்டம் பூடானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்ச்சியில் பூடான் தூதா் வி.நம்கியால், மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com