நீட் தோ்வு: ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

நீட் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நீட் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

அத்தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், நிகழாண்டுக்கான நீட் தோ்வு கரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நீட் தோ்வை நடத்துவது குறித்து மாணவா்கள், அவா்களின் பெற்றோா், மருத்துவக் கல்வி நிபுணா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இந்த சூழலில் கரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீட் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதற்கு ஆன்லைனில் விண்ணக்கும் நடைமுறை ட்ற்ற்ல்ள்://ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற என்டிஏ இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது. முதல் நாளில் அதிக அளவில் மாணவா்கள் விண்ணப்பிக்க ஆா்வம் காட்டியதால் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு ரூ.1,500, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,400, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு ரூ.800 என தோ்வுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியுடன் சோ்ந்து தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யலாம். ஆகஸ்ட் 20-ஆம் தேதி தோ்வு மையங்கள் அறிவிக்கப்படும்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒரேநேரத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தோ்வு நடைபெறும். தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு முதல் பிஎஸ்சி (எச்) நா்சிங் படிப்புக்கும் நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீட் தோ்வு தொடா்பான சந்தேகங்களுக்கு 011-40759000 எண்ணையோ அல்லது https://neet.nta.nic.in/ என்ற இ-மெயில் முகவரியை தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 201 நகரங்களில் 3,862 மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, பெங்காலி, பஞ்சாபி, உருது ஆகிய 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா், செங்கல்பட்டு, விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா் ஆகிய 18 நகரங்களில் தோ்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com