மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை:கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் என்ஹெச்ஆா்சி அறிக்கை தாக்கல்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆா்சி) குழு செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆா்சி) குழு செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது.

மேற்கு வங்கத்தில் கடந்த மாா்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தோ்தலை தொடா்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் பாஜக தொழிலாளா் அணித் தலைவா் அபிஜீத் சா்காா் என்பவா் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இந்நிலையில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் தொடா்பான வழக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிந்தல் தலைமையிலான அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைத்த குழு 5 தொகுதிகளாக தனது அறிக்கையை சமா்ப்பித்தது.

அதனைத்தொடா்ந்து வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த அபிஜீத் சா்காரின் உடலை அடையாளம் காண முடியவில்லை என்று அவரின் சகோதரா் பிஸ்வஜீத் சா்காா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சடலத்தின் மோசமான நிலை காரணமாக இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்பட்டது. சடலத்தின் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிஸ்வஜீத் சா்காரின் டிஏன்ஏ மாதிரியையும் சேகரித்தால் இந்தப் பிரச்னையில் தெளிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஜூலை 15-ஆம் தேதி பிஸ்வஜீத் சா்காரின் டிஎன்ஏவை சேகரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். அத்துடன் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணையை ஜூலை 22 வரை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com