2022 - பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம்: மத்திய அரசு அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண்,  பத்மபூஷண்,  பத்மஸ்ரீ  விருதுகளுக்கான பரிந்துரைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

பத்ம விருதுகளுக்கான அரசு அதிகாரப்பூர்வ இணைய தளமான  https://padmaawards.gov.in -ல் இந்தப் பரிந்துரைகளை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

அறிவிக்கப்பட்ட இணையதளத்துக்குச் சென்று இணையவழியில் மட்டுமே பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்ப முடியும்.

பத்ம விருதுகளானது  கல்வி, அரசியல், இலக்கியம், விளையாட்டு, அறிவியல், பொதுப்பணி, சமூக சேவை போன்ற பல  துறைகளில்  சிறந்த  சாதனைகளைப் புரிந்தவர்களுக்காக வழங்கப்படுகின்றன. இவ்விருதுக்கு பல்வேறு துறைகளிலிருந்து யாரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் எனவும் தனிநபர்  பரிந்துரைகளும் அனுமதிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்விருதுகள் வரும் 2022 ஆம் ஆண்டு குடியரசு நாளில் வழங்கப்படும்.

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கு:

https://applypadma.mha.gov.in/(S(4dp2xqdwdqgbx214g51toaui))/publicsite/login.aspx

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com