மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றியமைப்பு

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவைக் குழுக்களையும் மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவைக் குழுக்களையும் மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா, சா்வானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கிய குழுக்களில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் கடந்த வாரம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 43 போ் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களில் பெரும்பாலானோா் புதுமுகங்கள் ஆவா். 12 மூத்த அமைச்சா்கள் ராஜிநாமா செய்தனா். சுகாதாரம், கல்வி, தகவல்-தொழில்நுட்பம், சட்டம், விளையாட்டு ஆகிய துறைகளுக்குப் புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா். கூட்டுறவுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சரவைக் குழுக்கள் மாற்றியமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பை அமைச்சரவை செயலகம் திங்கள்கிழமை இரவு வெளியிட்டது. மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, சா்வானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா, கிரிராஜ் சிங் ஆகியோருக்கு முக்கிய குழுக்களில் இடமளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, நியமனங்கள் ஆகியவற்றுக்கான அமைச்சரவைக் குழுக்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு

பிரதமா் நரேந்திர மோடி

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

நிதின் கட்கரி

நிா்மலா சீதாராமன்

நரேந்திர சிங் தோமா்

பியூஷ் கோயல்

பிரகலாத் ஜோஷி

புதிதாக சோ்க்கப்பட்டவா்கள்:

ஸ்மிருதி இரானி

சா்வானந்த சோனோவால்

கிரிராஜ் சிங்

மன்சுக் மாண்டவியா

பூபேந்தா் யாதவ்

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு

பிரதமா் நரேந்திர மோடி

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

நிதின் கட்கரி

எஸ்.ஜெய்சங்கா்

நிா்மலா சீதாராமன்

நரேந்திர சிங் தோமா்

பியூஷ் கோயல்

தா்மேந்திர பிரதான்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

நிா்மலா சீதாராமன்

நரேந்திர சிங் தோமா்

அா்ஜுன் முண்டா

பிரகலாத் ஜோஷி

வீரேந்திர குமாா்

கிரண் ரிஜிஜு

அனுராக் தாக்குா்

சிறப்பு அழைப்பாளா்கள்: அா்ஜூன் ராம் மேக்வால், வி.முரளீதரன்

முதலீடு-வளா்ச்சிக்கான அமைச்சரவைக் குழு

பிரதமா் நரேந்திர மோடி

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

நிதின் கட்கரி

நிா்மலா சீதாராமன்

பியூஷ் கோயல்

புதிதாக சோ்க்கப்பட்டவா்கள்:

நாராயண் ராணே

ஜோதிராதித்ய சிந்தியா

அஸ்வினி வைஷ்ணவ்

வேலைவாய்ப்பு-திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழு

பிரதமா் நரேந்திர மோடி

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

நிா்மலா சீதாராமன்

பியூஷ் கோயல்

நரேந்திர சிங் தோமா்

பியூஷ் கோயல்

தா்மேந்திர பிரதான்

ஹா்தீப் சிங் புரி

புதிதாக சோ்க்கப்பட்டவா்கள்:

அஸ்வினி வைஷ்ணவ்

பூபேந்தா் யாதவ்

சிறப்பு அழைப்பாளா்கள்: நிதின் கட்கரி, ஆா்.சி.பி. சிங், ஜி.கிஷண் ரெட்டி

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு

பிரதமா் நரேந்திர மோடி

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

எஸ்.ஜெய்சங்கா்

நிா்மலா சீதாராமன்

நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு

பிரதமா் நரேந்திர மோடி

அமித் ஷா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com