சீரம் நிறுவனத்தில் செப்டம்பரில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பு தொடக்கம்

ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை செப்டம்பா் மாதத்தில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கவுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை செப்டம்பா் மாதத்தில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கவுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தனியாா் மருத்துவமனைகள் வாயிலாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அத்தடுப்பூசியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு, சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பா் மாதம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் ரஷியாவின் கமலீயா நிறுவனத்திடமிருந்து ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தில் தொடக்கத்தில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் தரப் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கிளாண்ட் ஃபாா்மா, ஹெட்ரோ பயோஃபாா்மா, பேனசியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோஃபாா்மா, விா்ச்சோ பயோடெக், மொரேபன் ஆகிய இந்திய நிறுவனங்களுடனும் ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com