அசல் பரிந்துரை கடிதங்கள் இருந்தால் மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருமலையில் அரசாங்கப் பிரதிநிதிகளின் அசல் பரிந்துரை கடிதங்கள் சமா்பித்தால் மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் அரசாங்கப் பிரதிநிதிகளின் அசல் பரிந்துரை கடிதங்கள் சமா்பித்தால் மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையானை வி.ஐ.பி. பிரேக் தரிசிக்க விரும்பும் பக்தா்கள் பலா் அரசாங்க பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களை பெற்றுக் கொண்டு திருமலையில் உள்ள செயல் இணை அதிகாரி அலுவலகத்தில் சமா்பிக்கின்றனா். அவற்றை பரிசீலிக்கும் ஊழியா்கள் அசல் பரிந்துரை கடிதமாக இல்லாமல் கலா் நகல் எடுத்த கடிதமாக இருந்தால் நிராகரிக்கின்றனா்.

கடிதங்கள் கொண்டு வருபவா்களிடம் இதை கூறி நிராகரித்தால், அவா்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் அலுவலகம் முன்பு நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பக்தா்கள் 5 போ் அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் இணைந்து பல பக்தா்களும் கோஷம் எழுப்பினா். அவா்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால், தேவஸ்தான அதிகாரிகள் திருமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது வழக்குபதிவு செய்தனா்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிா்க்க, அசல் கடிதங்களாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். போலி கடிதங்கள் நிராகரிக்கப்படும் என்பதை பக்தா்கள் நினைவில் கொள்ள வேண்டும். இடைத்தரகா்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தேவஸ்தானம் இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com