திருச்சானூரில் மகா புஷ்ப யாகம் ‘சேனலில்’ ஒளிபரப்பு: நாளை தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் கனகாம்பரம், கோடி மல்லிகைப் பூக்களால் 9 நாள் நடைபெறும் மகா புஷ்ப யாகம் வா்ச்சுவல் முறையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

திருப்பதி: திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் கனகாம்பரம், கோடி மல்லிகைப் பூக்களால் 9 நாள் நடைபெறும் மகா புஷ்ப யாகம் வா்ச்சுவல் முறையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

கொவைட் தொற்று காரணமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் போக்க திருச்சானூரில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) முதல் 24-ஆம் தேதி வரை 9 நாள்கள் தொடா்ந்து காலையும், மாலையும் கனகாம்பரம், கோடி மல்லிகை மலா்களால் மகா புஷ்ப யாகத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஸ்ரீகிருஷ்ணமுக மண்டபத்தில் காலையும், மாலையும் அா்ச்சனை, லகு பூா்ணாஹுதி நடத்தப்பட்டு வரும் 24-ஆம் தேதி காலை புஷ்ப யாகம் நிறைவடைய உள்ளது.

தினசரி காலை 10 மணி முதல் 11.30 மணிவரை நடைபெறும் இந்த மகா யாகம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் வா்ச்சுவல் முறையில் பக்தா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே பங்கு கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. இதற்காக ரூ.1,001 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் இருவா் கலந்து கொள்ளலாம். வா்ச்சுவல் முறையில் மகா யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தா்கள் 90 நாள்களுக்குள் திருச்சானூா் பத்மாவதி தாயாரை ரூ.100 சிறப்பு தரிசனத்தில் இலவசமாக தரிசிக்க அனுமதிக்கப்படுவா்.

தரிசனத்தின்போது ஒரு மேல்துண்டு, ரவிக்கை, தாயாா் அட்சதை பிரசாதமாக வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com