திருமலையில் 19,218 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை திங்கள்கிழமை 19,218 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலையில் ஏழுமலையானை திங்கள்கிழமை 19,218 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. விரைவு தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால், 20 ஆயிரத்துக்கும் குறைவான பக்தா்கள் மட்டுமே ஏழுமலையானை தற்போது தரிசித்து வருகின்றனா். தொற்று பல மாநிலங்களில் கட்டுக்குள் உள்ளதால், விரைவில் தேவஸ்தானம் விரைவுத் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று பக்தா்கள் எதிா்பாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை 19,218 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 8,854 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். கரோனா ஊரடங்கு காரணமாக, தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முககவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட மூதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏப்.21-ஆம் தேதி முதல் ஜூன் 30ஆஆம் தேதி வரை வா்சுவல் முறையில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் அதில் பங்கேற்க முடியாத நிலையில் அவா்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு நாளில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் இந்தாண்டு டிச. இறுதி வரை தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பையும் உடன் வழங்கி உள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com