திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தியது.
திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தியது.

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்ஸவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் சுத்தம் செய்து வருகிறது. அதை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் என்று அழைத்து வருகிறது.

இந்தநிலையில் ஜூலை 16ஆம் தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறுவதால், செவ்வாய்கிழமை காலை ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்பட்டது.

அதற்கு முன்பு கருவறையில் உள்ள உற்சவமூா்த்தி சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு ஏழுமலையான் மேல் வெள்ளை போா்வை போா்த்தப்பட்டது. பின்னா் கருவறை சுவா்கள் முதல் வெளிவாயில், தங்க கோபுரம், தரிசன வரிசைகள், உயா் மேடைகள் உள்ளிட்டவை பச்சை கற்பூரம், கிச்சிலி கிழங்கு, மஞ்சள், சந்தனம், அகில், பூங்கற்பூரம் உள்ளிட்ட பொருட்களால் சுத்தப்படுத்தப்பட்டது. இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதையொட்டி காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com