நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா விதிகள் அப்பட்டமாக மீறல்: மத்திய அரசு கவலை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் லவ் அகர்வால், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
 வானிலை முன்னறிவிப்பு போல், கரோனா மூன்றாவது அலை தாக்கக் கூடிய அபாôயம் குறித்து மக்கள் பேசுகின்றனர். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
 குறிப்பாக சில மலைவாசஸ்தலங்கள் மற்றும் தில்லியில் சதர் பஜார், ஜன்பத் மார்க்கெட், சென்னையில் ரங்கநாதன் தெரு, தமிழ்நாட்டில் விலாரிப்பட்டி போன்ற வணிகப் பகுதிகள், சண்டீகரில் உள்ள சுக்னா ஏரி, மகாராஷ்டிரத்தில் உள்ள பூஷி அணை ஆகிய இடங்களில் மக்கள் கரோனா விதிகளை மீறி ஏராளமாகக் கூடுகின்றனர். சூழலைவிட, நமது அணுகுமுறைதான் மூன்றாவது அலைக்குக் காரணமாக இருந்துவிடும்; கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இதுவரை கிடைத்து வந்த பயன்களை சீர்குலைத்துவிடும். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றினால்தான் எதிர்காலத்தில் கரோனா பாôதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
 உலக அளவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதற்கு உதாரணமாக பிரிட்டன், ரஷியா, வங்கதேசம், இந்தோனேசியாவை கூறலாம். இது கவலை அளிக்கிறது.
 நாட்டில் ஜூலை மாதத்தில் இதுவரை பதிவான புதிய கரோனா பாதிப்புகளில் 73.4 சதவீதம் கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் பதிவாகியுள்ளன.
 ஜூலை 13 வரையிலான வாரத்தில் 55 மாவட்டங்களில் கோவிட் பாதிப்புகள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.
 கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவுவதற்காக மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், அஸ்ஸாம், மேகாலயம், ஒடிஸா, மிúஸாரம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
 அவருடன் செய்தியாளர்களைச் சந்தித்த நீதி ஆயோக் உறுப்பினர் (மருத்துவம்) டாக்டர் வினோத் கே.பால் கூறுகையில் "உலக அளவில், கரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க மக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.
 இந்தியாவில் செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு உயிரிழந்த 2,020 பேருடன் சேர்த்து நாட்டில் இதுவரை இத்தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,10,784-ஆக உயர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com