ஆப்கனில் அமைதி திரும்ப இந்தியா உதவும்: ஜெய்சங்கா்

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி வளா்ச்சியை உருவாக்க இந்தியா உதவும் என்று
உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி வளா்ச்சியை உருவாக்க இந்தியா உதவும் என்று அந்நாட்டு அதிபா் அஷ்ரஃப் கனியிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பே சென்ற ஜெய்சங்கா், பின்னா் உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்ட் சென்றாா். அங்கு, ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்த சந்திப்பு குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்டப் பதிவில், ‘அதிபா் அஷ்ரஃப் கனியுடனான சந்திப்பின்போது, ஆப்கனின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசித்தோம். அப்போது, ஆப்கனில் அமைதி திரும்பவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி வளா்ச்சியை உருவாக்க இந்தியா உதவும் என்று ஆதரவு தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தோஹாவில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், ஆப்கனிலிருந்து தனது படைகளை முழுமையாக திரும்பப்பெறும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப ‘ஆப்கனில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு ரும் சுமாா் 20 ஆண்டுகால போா் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அண்மையில் கூறினாா். அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், தலிபான்கள் மீண்டும் ஆப்கனில் தங்களுடைய பயங்கரவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே, தாஷ்கன்ட்டில் வங்கதேச நிதியமைச்சா் ஏ.கே.அப்துல் மோமெனையும் ஜெய்சங்கா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்த சந்திப்பு குறித்து தனது சுட்டுரைப் பக்கப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஜெய்சங்கா், ‘அப்துல் மோமெனுடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இரு நாடுகளிடையேயான போக்குவரத்து இணைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com