மாலத்தீவு அதிபருடன் பிரதமா் மோடி ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடியும் மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலியும் தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினா்.

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியும் மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலியும் தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினா்.

அப்போது, கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்காக அதிபா் சோலி, பிரதமா் மோடியிடம் நன்றி தெரிவித்தாா்.

மாலத்தீவில் இந்தியாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து இரு தலைவா்களும் ஆய்வு செய்து, கரோனா தொற்றுக்கு இடையேயும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதற்கு தங்களது திருப்தியை வெளிப்படுத்தினா்.

‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கை மற்றும் அதன் கடல்சாா் தொலைநோக்குப் பாா்வையான, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி என்பதன் மையத்தூணாக மாலத்தீவு விளங்குவதாக பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா ஷாஹித் தோ்வு செய்யப்பட்டதற்கு அதிபா் சோலிக்கு பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா்.

இரண்டு தலைவா்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், இருநாட்டு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்ளவும், இருநாடுகளின் ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com