நூறாண்டுகளாக கட்டமைக்கப்பட்டவை நொடிபொழுதில் அழிப்பு: ராகுல்

நூறாண்டுகளாக கட்டமைக்கப்பட்டவை நொடிபொழுதில் அழிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமரிசனம் செய்துள்ளார்.
நூறாண்டுகளாக கட்டமைக்கப்பட்டவை நொடிபொழுதில் அழிப்பு: ராகுல்


நூறாண்டுகளாக கட்டமைக்கப்பட்டவை நொடிபொழுதில் அழிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமரிசித்துள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை, இந்திய - சீன எல்லை பிரச்னை, விலை உயர்வு, விவசாயிகள் என பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டு தனது விமரிசனத்தை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி.

இதுபற்றிய ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு:

"நூறாண்டுகளாக கட்டமைக்கப்பட்டவை நொடி பொழுதில் அழிக்கப்பட்டுவிட்டன. இந்தக் கடினமான சூழலுக்கு யார் காரணம் என்பது நாடறியும்."

கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய, சீன படைகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்ற மோதல் சம்பவம் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தியை ராகுல் காந்தி நேற்று (புதன்கிழமை) தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளதாக விமரிசித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com