தடுப்பூசி பற்றாக்குறையா?: அமைச்சா் மாண்டவியா விளக்கம்

நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகள் தாமதமாக கிடைப்பதாகவும் சில மாநிலங்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கூறி வருகிறாா்கள்.
தடுப்பூசி பற்றாக்குறையா?: அமைச்சா் மாண்டவியா விளக்கம்

புது தில்லி: நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகள் தாமதமாக கிடைப்பதாகவும் சில மாநிலங்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கூறி வருகிறாா்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘இத்தகைய கூற்றுகள் உண்மையானவை அல்ல, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இவ்வாறு கூறப்படுகிறது. ஆதாரம் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தற்போதைய நிலைமையை நன்றாக புரிந்துகொள்ள முடியும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் மூலம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், 11.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தால் கடந்த ஜூன் மாதம் கிடைக்கச் செய்யப்பட்டன. இது 13.50 கோடி டோஸ்களாக ஜூலை மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து நிலவரம் குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட பின்னரும் நிா்வாக குறைபாடு மற்றும் பயனாளா்களின் நீண்ட வரிசைகள் காணப்படுகிறது என்றால் பிரச்னை என்ன, அதற்கு காரணம் யாா் என்பது தெளிவாகத் தெரியவருகிறது’’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com