மேற்கு வங்க வன்முறை: மம்தா அரசை விமரிசித்த மனித உரிமைகள் ஆணையம்

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைத்த குழு மம்தா அரசை விமரிசனம் செய்துள்ளது.
மேற்கு வங்க வன்முறை: மம்தா அரசை விமரிசித்த மனித உரிமைகள் ஆணையம்

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைத்த குழு மம்தா அரசை விமரிசனம் செய்துள்ளது.

கடந்த மே மாதம், தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பாஜக தொண்டர்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு குழுவை அமைத்தது. கொல்கத்தா உயர் நிதீமன்றத்தில் இக்குழு தங்களின் அறிக்கையை நேற்று சமர்பித்தது. அதில், "சட்டத்தின்படி நடைபெறாமல் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப மேற்குவங்கத்தில் ஆட்சி நடைபெறுகிறது. 

கடந்த இரண்டு மாதங்களில், தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்னர். மேலும், அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் குறித்து சிபிஐ  விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணையானது மேற்கு வங்கத்தை தவிர்த்து வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும். இந்த விசாரணைகளை நீதிமன்றம் அமைக்கும் சிறப்பு புலனாய்வு குழு கண்காணிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தேர்தல் முகவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் என 123 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்த குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், சில கைது நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் மம்தா, நிறுவனங்களை பாரபட்சமாக மாநில அரசுக்கு எதிராக பாஜக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com