மேக்கேதாட்டு அணை கட்ட சாத்தியக் கூறு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி: துரைமுருகன்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதி
மேக்கேதாட்டு அணை கட்ட சாத்தியக் கூறு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி: துரைமுருகன்
மேக்கேதாட்டு அணை கட்ட சாத்தியக் கூறு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி: துரைமுருகன்

புது தில்லி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதி அளித்திருப்பதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் கட்டுவதற்கு உத்தேசித்துள்ள அணை திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழக சட்டப் பேரவைக் கட்சிகள் குழு தில்லி சென்று, அங்கு மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இன்று சந்தித்துப்  பேசினர்.

புது தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக் கூடாது என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

தமிழக சட்டப்பேரவை கட்சிகள் குழுவிடம், மத்திய அமைச்சர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, முக்கிய உறுதிமொழிகளையும் அளித்தார்.

அதில், மேக்கேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு அளித்த திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை என்றும் கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படாது. எனவே, மேக்கேதாட்டு அணைக்கு எப்போதுமே அனுமதி கிடைக்காது என்று மத்திய அமைச்சர் உறுதியாகக் கூறியுள்ளார். 

அதோடு, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக எந்த உறுதிமொழியையும் கர்நாடக அரசுக்கு அளிக்கவில்லை என்றும் தமிழக அனைத்துக் கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு துணை போகக் கூடாது என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டப் பேரவையில் உள்ள 13 கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் கடந்த திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு தீா்மானமாக, சட்டப் பேரவைக் கட்சிகளைச் சோ்ந்த குழுவினா் தில்லி சென்று மத்திய அரசை வலியுறுத்தும் என்பதாகும். இந்தத் தீா்மானத்தின் அடிப்படையில், சட்டப் பேரவைக் கட்சிகள் குழு வியாழக்கிழமை பிற்பகல் தில்லி சென்றது.

அங்கு மத்திய நீா்வளத் துறை கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோரை இன்று நேரில் சந்தித்து, மேக்கேதாட்டுவில் கா்நாடகம் உத்தேசித்துள்ள அணைத் திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என தமிழக பேரவைக் கட்சிகள் குழு வலியுறுத்தியது. 

முன்னதாக, கா்நாடகம் சென்ற மத்திய அமைச்சா் ஷெகாவத்தை, அந்த மாநில முதல்வா் எடியூரப்பா சந்தித்து மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி வத்துள்ள தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் விவரம்: 

1. ஆர்.எஸ்.பாரதி - திமுக
2. கோபண்ணா - காங்கிரஸ்
3. ஜி.கே.மணி - பாமக
4. வைகோ - மதிமுக
5. பால்கனகராஜ் - பாஜக
6. என்.பெரியசாமி - சிபிஐ
7. கே.பாலகிருஷ்ணன் - சிபிஎம்
8. ஜவாஹிருல்லாஹ் - மமக
9. வேல்முருகன் - தவாக
10. சின்னராஜ் - கொமக
11. ஜகன்மூர்த்தி - புரட்சி பாரதம்
இவர்களோடு அதிமுக சார்பாக டி.ஜெயகுமார் மற்றும் விசிக சார்பாக திருமாவளவன் ஆகியோர் இன்று காலை தில்லி வந்தனர். 

கர்நாடகா அரசு மேக்கே தாட்டு அணை கட்டுவதை எதிர்த்து, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழகத்தில் இருந்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தில்லி வந்தடைந்தனர். அவர்களை தமிழகத்தின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்விஜயன் பொன்னாடை போர்த்தி தில்லி தமிழ்நாடு இல்லத்தில் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com