சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய நிா்வாகம் முடிவு செய்துள்ளது.  
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய நிா்வாகம் முடிவு செய்துள்ளது. 
கடந்த மே மாதம் கரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று முதல் ஜூலை 21 வரை நடை திறக்கப்பட்டுள்ளது. 
இந்த 5 நாள்களும் கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோயில் வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதேசமயம் பக்தர்கள், sabarimalaonline.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் தெவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com