‘காவிமயமாக்கப்பட்டு வருகிறது கல்வி’: மேற்குவங்க கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி காவிமயமாக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க கல்வி அமைச்சர்
மேற்குவங்க கல்வி அமைச்சர்

பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி காவிமயமாக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் குறித்த பாடப்பகுதி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மேற்குவங்க கல்வியமைச்சர் பரத்யா பாசு, பாஜக ஆளும் மாநிலங்களில் மதச்சார்பின்மை குறித்த பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும், “பாஜக கல்வியில் காவியை புகுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தனது எழுத்துக்களின் மூலம் மதச்சார்பின்மையை வலியுறுத்தி வந்த தாகூர் குறித்த பாடப்பிரிவை நீக்கியிருப்பதன் மூலம் அவர்களின் ஆதிக்க மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. பாஜகவிற்கு மதச்சார்பின்மை தத்துவத்தின் மீது ஒவ்வாமை உள்ளது” என பாசு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com