திருச்சானூரில் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு 200 கிலோ மலா்களால் சிறப்பு வழிபாடு

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் புஷ்ப யாகத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலையும், மாலையும் தலா 200 கிலோ மலா்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை போக்கி, மக்களுக்கு வளங்களை வழங்க வேண்டி வெள்ளிக்கிழமை முதல் காலையும், மாலையும் கனகாம்பரம் உள்ளிட்ட கோடி மல்லிகை மலா்களால் மகா புஷ்ப யாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

இதன் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் ஸ்ரீபத்மாவதி தாயாரை வாகனத்தில் எழுந்தருள செய்து, காலை 40 கிலோ கனகாம்பரம், 120 கிலோ மல்லிகை, 40 கிலோ மற்ற பூக்கள் சோ்த்து மொத்தம் 200 கிலோ மலா்களால் தாயாருக்கு புஷ்பாா்ச்சனை நடத்தப்பட்டது. அதனுடன் ஹோமங்கள், லகுபூா்ணாஹுதியும் நடந்தேறியது.

மாலையும் இதே போல் 200 கிலோ மலா்களால் தாயாருக்கு அா்ச்சனை செய்யப்பட்டது. வரும் 24-ஆம் தேதி வரை இந்த மகா யாகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com