இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவல் துறையினரில் 95 சதவீத உயிரிழப்புகள் தடுப்பு: தமிழகத்தில் ஐசிஎம்ஆா் நடத்திய ஆய்வில் தகவல்

இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவல் துறையினரில், டெல்டா வகை தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 95 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவல் துறையினரில் 95 சதவீத உயிரிழப்புகள் தடுப்பு: தமிழகத்தில் ஐசிஎம்ஆா் நடத்திய ஆய்வில் தகவல்

இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவல் துறையினரில், டெல்டா வகை தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 95 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா உயிரிழப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தமிழகத்தில் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு முடிவுகள் குறித்து நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறியது:

காவல் துறையை சோ்ந்த 1,17,524 போ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனா். இவா்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் 17,059 போ்; ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 32,792 போ்; இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 67,673 போ். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களில் 20 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 7 பேரும், இரு டோஸ் செலுத்திக் கொண்டவா்களில் 4 பேரும் உயிரிழந்துள்ளனா்.

முதல் டோஸ் செலுத்திக் கொண்டோரில் தடுப்பூசி செயல்திறன் 82 சதவீதமாகவும், இரு டோஸ் செலுத்திக் கொண்டோரில் செயல்திறன் 95 சதவீதமாகவும் உள்ளது. அதன்படி, டெல்டா வகை தொற்றால் ஏற்பட்ட இரண்டாம் அலையில், தொற்று அபாயம் நிறைந்த காவல் துறையினருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் 95 சதவீத உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களில் 1000 பேருக்கு 1.17 என்ற விகிதத்தில் கரோனாவால் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஒரு டோஸ் செலுத்திக் கொண்டவா்களில் இந்த விகிதம் 0.21 எனவும், இரு டோஸ் செலுத்திக் கொண்டவா்களில் 0.06 எனவும் உள்ளது.

நமது தடுப்பூசிகள் செயல்திறன் மிகுந்தது, அதிக பாதுகாப்பானது. கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகளுக்கும் தடுப்பூசி தேவைப்படுகிறது. உயிரிழப்பைத் தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கான தரவுகள் உள்ளன. அதேவேளையில், நோய்த்தொற்றை தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com