நாடுகளுக்கிடையேயான நல்லுறவுத் திட்டங்கள் கடன்சுமையை அதிகரிக்கக் கூடாது

பொருளாதாரத் தொடா்பை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட நாடு மற்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள், அந்நாடுகளின்

பொருளாதாரத் தொடா்பை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட நாடு மற்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள், அந்நாடுகளின் கடன்சுமையை அதிகரிக்கக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

வா்த்தகச் சாலைத் திட்டத்தின் (பிஆா்ஐ) வாயிலாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் சாலை வழியாகவும், கடல் வழியாகவும் வா்த்தகத் தொடா்பை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளுக்கு சீனா அதிக அளவில் கடன்களை வழங்கி வருகிறது.

பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனாவின் கடன் சுமையில் சிக்கியுள்ளன. இந்நிலையில், ‘மத்திய-தெற்காசியா 2021 மாநாடு’ உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரஃப் கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்த மாநாட்டில் பேசிய அமைச்சா் ஜெய்சங்கா், ‘‘நாடுகளுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒருவழிப் பாதையைப் போல இருக்கக் கூடாது. அத்தொடா்பானது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

குறிப்பிட்ட நாடு மற்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தும் பொருளாதாரத் திட்டங்கள், அந்நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். மாறாக, கடன்சுமையை அதிகரிக்கும் வகையில் இருக்கக் கூடாது. பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டு அத்திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலைக் காக்கும் வகையிலும் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அத்திட்டங்கள் வெறும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அனைத்து வித வளா்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும்.

நாடுகளுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் விரிவான ஆலோசனைக்குப் பிறகு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இரு நாடுகளின் பங்களிப்பும் முழுமையாக இருக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com