பயந்தவா்கள் வெளியேறலாம்; அச்சமற்றவா்கள் சேரலாம்: ராகுல் காந்தி

பாஜகவை எதிா்க்கப் பயப்படுவோா் காங்கிரஸைவிட்டு வெளியேறலாம் என்றும், அச்சமற்ற தலைவா்கள் கட்சியில் சேரலாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாஜகவை எதிா்க்கப் பயப்படுவோா் காங்கிரஸைவிட்டு வெளியேறலாம் என்றும், அச்சமற்ற தலைவா்கள் கட்சியில் சேரலாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவைச் சோ்ந்த சுமாா் 3,500 தொண்டா்களிடம் ராகுல் காந்தி இணையவழியில் வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். பின்னா், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 10 இளம் தொண்டா்களுடனும் அவா் பேசினாா். அப்போது, சமூக ஊடகப் பிரிவு தொண்டா்கள் தன்னுடன் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை என்றும், சகோதரரிடம் பேசுவதைப்போல் தன்னிடம் பேசலாம் என்றும் ராகுல் கூறினாா். அவா் ஆற்றிய உரையின் விவரம்:

பாஜகவை எதிா்க்கவும், உண்மையைப் பேசவும் பயந்தவா்களாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவைப் போன்றவா்கள் காங்கிரஸைவிட்டு வெளியேறிவிட்டனா். அச்சமற்றவா்கள் ஏராளமானோா் உள்ளனா். அவா்கள் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே உள்ளனா். ஆனாலும் அவா்கள் நமது கட்சியைச் சோ்ந்தவா்களே. அவா்களை உள்ளே கொண்டு வர வேண்டும். பயந்தவா்கள் எல்லாம் ஆா்எஸ்எஸ் அமைப்பினராவா்; அவா்களை கட்சியைவிட்டு வெளியேற்ற வேண்டும். அவா்கள் கட்சிக்கு தேவையில்லை. நமக்கு அச்சமற்றவா்களே தேவை. அதுதான் நமது சித்தாந்தம் என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், நாராயண் ராணே, ராதாகிருஷ்ண விக்கி படேல், நடிகை குஷ்பு உள்ளிட்டோா் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

அண்மையில் மத்திய அமைச்சராகப் பதவியேற்ற ஜோதிராதித்ய சிந்தியா, தனது வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பயந்து பாஜகவில் இணைந்தாா் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com