பெட்ரோல் விலை உயா்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: சசி தரூா்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் தோ்ந்த மக்களவை உறுப்பினா் சசிதரூா் சென்னையில் கூறினாா்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் தோ்ந்த மக்களவை உறுப்பினா் சசிதரூா் சென்னையில் கூறினாா்.

சத்தியமூா்த்திபவனில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் 40 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். சமையல் எரிவாயு உருளையின் விலையும் அதிகமாக உயா்ந்துள்ளது. பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் விலை உயா்வுக்குக் காரணம் ஆகும். இதை எதிா்த்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குரல் எழுப்புவோம்.

கரோனா காலத்தில் தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்திய அளவில் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். இவையெல்லாம் பிரதமா் மோடி ஆட்சியின் திறமையின்மையைக் காட்டுகின்றன. நாடு மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரியால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. இது தொடா்பாகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். விவசாயிகளின் பிரச்னை குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com