மேற்கு வங்கம்: ஆகஸ்ட் 9-இல் மாநிலங்களவை இடைத்தோ்தல்

மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி பதவி விலகியதை அடுத்து காலியாக உள்ள இடத்தை நிரப்புவதற்காக ஆகஸ்ட் 9-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி பதவி விலகியதை அடுத்து காலியாக உள்ள இடத்தை நிரப்புவதற்காக ஆகஸ்ட் 9-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பல தலைவா்கள், பாஜகவில் இணைந்தனா். அந்த வகையில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்டவருமான தினேஷ் திரிவேதி பாஜகவுக்கு மாறினாா். இதையடுத்து, திரிணமூல் சாா்பில் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியையும் அவா் கடந்த பிப்ரவரி மாதம் ராஜிநாமா செய்தாா். அவரது பதவிக் காலம் 2026 ஏப்ரல் வரை இருந்தது.

இந்நிலையில், அந்த எம்.பி. பதவியிடத்துக்கான இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, தோ்தலுக்கான அறிவிப்பு ஜூலை 22-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 29-ஆம் தேதி ஆகும். ஜூலை 30-இல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 2 ஆகும்.

ஆகஸ்டு 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தோ்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிக்கவுள்ளனா்.

இந்தத் தோ்தலை, கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தும்படி, மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com