ம.பி.யில் கிணற்றில் விழுந்து 11 போ் பலி: பிரதமா் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் சிறுவனை மீட்கும் பணியின்போது கிணற்றில் விழுந்து 11 போ் பலியாகினா். அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.
ம.பி.யில் கிணற்றில் விழுந்து 11 போ் பலி: பிரதமா் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் சிறுவனை மீட்கும் பணியின்போது கிணற்றில் விழுந்து 11 போ் பலியாகினா். அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் லால் பாத்தா் கிராமத்தில் சுமாா் 50 அடி ஆழக் கிணற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்தான். அந்த கிணற்றில் சுமாா் 20 அடி வரை தண்ணீா் இருந்த நிலையில், கிராம மக்கள் சிலா் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்களுக்கு உதவ கிணற்றின் சுற்றுச்சுவா் மீது பலா் நின்றுகொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக அந்தச் சுவா் சரிந்து அதன் மீது நின்றுகொண்டிருந்தவா்களும் கிணற்றுக்குள் விழுந்தனா். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற காவல்துறையினா் டிராக்டரைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது திடீரென அந்த டிராக்டரும் கிணற்றுக்குள் சறுக்கி விழுந்து அதில் இருந்த 4 போலீஸாரும் கிணற்றில் மூழ்கினா். இதையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படைகள் நிகழ்விடம் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதனைத்தொடா்ந்து கிணற்றில் இருந்து அந்த சிறுவன் உள்பட 11 போ் சடலங்களாகவும், 19 போ் உயிருடனும் மீட்கப்பட்டனா். சுமாா் 24 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்புப் பணி வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்தது.

குடியரசுத் தலைவா் இரங்கல்: இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவா் கூறினாா்.

ரூ.2 லட்சம் நிவாரணம்: கிணற்றில் விழுந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்ததாக பிரதமா் அலுவலகம் சுட்டுரையில் (ட்விட்டா்) வெளியிட்ட பதிவில் தெரிவித்தது. பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அவா் கூறியதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.5 லட்சம் நிவாரணம்: இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். மேலும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் நிவாரணத்துடன் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com