'பிங்க் பூத்' - முதல்முறையாக பெண்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்

பெண்களுக்கென ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ளது. 
'பிங்க் பூத்' - முதல்முறையாக பெண்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்

பெண்களுக்கென ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் 'பிங்க் பூத்' என்று அழைக்கப்படும் அனைத்து பெண்கள் கரோனா தடுப்பூசி மையம் நிறுவப்பட்டுள்ளது.

பெண்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்ற நோக்கிலும் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கான வசதியையும் ஏற்படுத்தும் நோக்கிலும் உதம்பூரில் பெண்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி முகாம் அனைவரையும் கவர்வதாக உள்ளது. மேலும் அதிகாரிகளின் இந்த வித்தியாசமான முயற்சியை அப்பகுதியில் பலரும் பாராட்டி வருகின்றனர். 

'தடுப்பூசி போடுவதற்கு இந்த சூழல் மிகவும் வசதியாக உள்ளது. இம்மாதிரியான முயற்சிகளால் தடுப்பூசி இயக்கம் எளிதாகிவிட்டது. பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பது இதன் மூலமாக தவிர்க்கப்படுவதுடன் பெண்களை தடுப்பூ போட ஊக்குவிப்பதாக இருக்கிறது' என்று தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து உதம்பூர் மாவட்ட மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் ரெய்னா கூறுகையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தனி இடத்தை வழங்குவதற்கான ஒரு முயற்சியே இது. பெண்கள் இதுதொடர்பாக தகவலறிந்து உற்சாகத்துடன் வருகிறார்கள். பெரிய அளவிலான தடுப்பூசி இயக்கங்கள் நடைபெறும்போது இதுபோன்று பெண்களுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தலாம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com