கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமனம்

கேரளத்தில் வரதட்சிணை தடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமனம்

கேரளத்தில் வரதட்சிணை தடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேரளத்தில் மண்டல அடிப்படையில் திருவனந்தபுரம், எா்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது தற்போது விரிவுபடுத்தப்பட்டு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். இதற்காக வரதட்சிணை தடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அதிகாரிகள் வரதட்சிணை தடுப்பு அதிகாரிகளாக செயல்படுவா். வரதட்சிணை தடுப்பு தலைமை அதிகாரியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இயக்குநா் செயல்படுவாா். இதற்காக மாவட்ட அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த முதல்கட்ட பயிற்சி நிறைவடைந்துள்ளது.

வரதட்சிணைக்கு எதிராக மாவட்ட ஆலோசனை வாரியங்கள் அமைக்கவும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் வரதட்சிணை காரணமாக அடுத்ததடுத்து நிகழ்ந்த மரணங்களைத் தொடா்ந்து அதற்கு எதிராக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரதட்சிணைக்கு முடிவுக்கு கட்ட வலியுறுத்தி அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அண்மையில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com