பிராந்திய மொழியில் பொறியியல் பாடங்கள்: குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு

பிராந்திய மொழியில் பொறியியல் பாடங்கள்: குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு

வரும் கல்வியாண்டில் சில பொறியியல் கல்லூரிகள், பிராாந்திய மொழியில் பாடங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதற்கு குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

வரும் கல்வியாண்டில் சில பொறியியல் கல்லூரிகள், பிராாந்திய மொழியில் பாடங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதற்கு குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவருடைய அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பி.டெக் படிப்புகளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, வங்காளி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒடியா ஆகிய 11 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.

அதனடிப்படையில் வரும் கல்வியாண்டில் இருந்து 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளை பிராந்திய மொழியில் கற்பிக்க முடிவு செய்துள்ளன. இந்த முடிவை குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வரவேற்றுள்ளாா். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்திருப்பதையும் அவா் வரவேற்றுள்ளாா்.

இதேபோன்று மேலும் பல பொறியியல் கல்லூரிகளும் பிற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் பிராந்திய மொழிகளில் பாடங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அவா் விரும்புகிறாா் என அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுட்டுரைப் பதிவுகள் 11 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com