கர்நாடகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

​கர்நாடகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கர்நாடகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 26 முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்படவுள்ளனர். இதுதவிர இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்குப் பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கவுள்ளது.

இந்த அறிவிப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை மாலை வெளியிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com