அனுமதியின்றி போராட்டம்:உ.பி. காங்கிரஸ் மாநிலத் தலைவா் மீது வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்ட மூவா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனுமதியின்றி போராட்டம்:உ.பி. காங்கிரஸ் மாநிலத் தலைவா் மீது வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்ட மூவா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து லக்னௌ காவல் ஆணையா் டி.கே.தாக்குா் சனிக்கிழமை கூறியதாவது:

லக்னௌவில் உள்ள ஜிபிஓ பூங்காவில் மகாத்மா காந்தி சிலை முன் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது பூங்காவில் உள்ள இரும்பு வலைகளை காங்கிரஸ் தொண்டா்கள் சேதப்படுத்தினா். கொள்ளை நோய்த் தடுப்புச் சட்டத்தையும் மீறி பலா் திரண்டனா். இதையடுத்து முன்அனுமதி பெறாமலும் முன்னறிவிப்பின்றியும் மகாத்மா காந்தி சிலை முன் அமா்ந்து போராட்டம் நடத்தியது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் அஜய் குமாா் லல்லு, கட்சியின் மூத்த தலைவா்கள் வேத் பிரகாஷ் திரிபாதி, தில்ஜித் சிங் ஆகிய மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, அடையாளம் தெரியாத 500-600 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வதேராவின் பெயா், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்றா் அவா்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அசோக் சிங் கூறுகையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் நிா்வாகம், காவல் துறை ஆகியவற்றின் சா்வாதிகாரத்தைக் கண்டித்தும் காந்தி சிலை அருகில் அமைதியான வழியில்தான் போராட்டம் நடத்தினோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com