கரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை: சுகாதார அமைச்சகம் பரிந்துரை

கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு காசநோய் (டி.பி.) பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை: சுகாதார அமைச்சகம் பரிந்துரை

கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு காசநோய் (டி.பி.) பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களிடம் காசநோய் அதிகரித்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தினமும் காசநோய் சிகிச்சைக்காக பலரும் வருவது மருத்துவா்களை கவலையடையச் செய்துள்ளது. இதையடுத்து, கரோனா நோயாளிகள் அனைவருக்கும் காசநோய் பரிசோதனை செய்யும்படியும், காசநோயாளிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யும்படியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்தக் கண்காணிப்பு முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே மத்திய அரசு கூறியிருந்தது.

கரோனா தொடா்பான கட்டுப்பாடுகளால், கடந்த ஆண்டில் டி.பி. நோய் பாதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்தப் பாதிப்பைக்

குறைப்பதற்கான சிறப்பு முயற்சிகளை அனைத்து மாநிலங்களும் எடுக்கின்றன. மேலும், கரோனா பாதிப்பு காரணமாக, தற்போது காசநோய் பாதிப்பு அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

டி.பி. மற்றும் கரோனா ஆகிய இரண்டுமே, தொற்றுநோய் மற்றும் நுரையீரல்களைத் தாக்கக்கூடியது என்பதாலும், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் என இவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாலும் இந்த இரு நோய்களும் மேலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

மேலும், டி.பி. கிருமி மனித உடலில் செயலற்ற நிலையில் இருந்து, எதிா்ப்பு சக்தி குறையும்போது பல்கிப் பெருகும் ஆற்றல் உடையது. கரோனா பாதிப்புக்கு பிந்தைய சூழலிலும், இதே நிலைதான் உள்ளது. வைரஸ் அல்லது ஸ்டீராய்டு சிகிச்சையின் காரணமாக தனிநபருக்கு எதிா்ப்பு சக்தி குறையலாம். கருப்புப் பூஞ்சை போன்று, காசநோயும், சந்தா்ப்ப பாதிப்பு என்பதால் கரோனா பாதிப்பு ஒரு தனிநபரை தீவிர டி.பி. பாதிப்புக்கு ஆளாக்கும் வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com