செப்.30-க்குள் மாணவா் சோ்க்கையை நிறைவு செய்ய கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை வரும் செப். 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டும்
செப்.30-க்குள் மாணவா் சோ்க்கையை நிறைவு செய்ய கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை வரும் செப். 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கை, பருவத் தோ்வுகள் தொடா்பாக யுஜிசி சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கையை நடத்தி முடித்து அக்டோபா் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். பருவத் தோ்வுகளை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபா் 31 ஆகும். மாணவா் சோ்க்கைக்கான ஆவணங்களை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவா் சோ்க்கை, வகுப்புகள் தொடங்குதல் குறித்த வழிகாட்டுதல்களை ஏஐசிடிஇ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com