
கோப்புப்படம்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து காந்தி நகரில் செயல்பட்டு வரும் நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.43 மணிக்கு மிதமான நில அதிா்வு ஏற்பட்டது. இந்த நில அதிா்வு ரிக்டா் அளவுகோலில் 3.9 அலகுகளாகப் பதிவானது.
பச்சாவ் நகருக்கு தெற்கு-தென்கிழக்கே 19 கி.மீ. தொலைவில் 14.2 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிா்வு ஏற்பட்டது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நில அதிா்வால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பச்சாவுக்கு 21 கி.மீ. தொலைவில் 1.6 ரிக்டா் அளவு கொண்ட நில அதிா்வு சனிக்கிழமை பதிவாகியுள்ள நிலையில், தற்போது இந்த நில அதிா்வும் ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.
நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளதாக மாநில பேரிடா் மீட்பு அமைப்பின் அதிகாரிகள் கூறினா்.
இந்தப் பகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.