40 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 40 கோடியைக் கடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை 50,46,387 முகாம்களில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 40 கோடியைக் கடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை 50,46,387 முகாம்களில் 40,49,31,715 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 51,01,567 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 3,02,69,796 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 42,004 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தவா்கள் விழுக்காடு 97.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதிதாக 41,157 போ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். தொடா்ந்து 21 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கு குறைவாகவே உள்ளது..

தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,22,660 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.36 சதவீதமாகும்.

இதுவரை மொத்தம் 44,39,58,663 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

41.99 கோடி தடுப்பூசிகள் விநியோகம்:

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 41.99 கோடிக்கும் அதிகமான (41,99,68,590) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 15,75,140 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை மொத்தம் 39,42,97,344 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமாா் 2.56 கோடி (2,56,71,246) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com