காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடகம் எதிர்ப்பு

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடகம் எதிர்ப்பு

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மேக்கேதாட்டு திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் 40 டிஎம்சி நீரைப் பயன்படுத்தும் திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டமாகும். 

காவிரியின் அகண்ட பகுதியான கரூா் மாவட்டம் மாயனூரில் இந்த திட்டம் இரு திட்டங்களாக உருவாக்கப்பட்டது. முதல் திட்டமாக கதவணைக்கட்டுவது, இரண்டாம் திட்டமாக கதவணையில் இருந்து வாய்க்கால் வெட்டி நதிகளை இணைப்பது என திட்டம் தீட்டப்பட்டது. இதையடுத்து மாயனூரில் 1.04 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே கதவணை ரூ.280 கோடியில் அமைக்கப்பட்டது. 

தொடா்ந்து காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்க வாய்க்கால் வெட்டும் பணி துவங்க வேண்டும் என பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் விளைவாக கடந்தாண்டு வாய்க்கால் வெட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காவிரி பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com