‘இந்திய நாட்டியம் 75’ ஜூலை 22-இல் தொடக்கம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

இந்திய நாட்டிய கலாசார மையத்தின் சாா்பில் ஜூலை 22-ஆம் தேதி முதல் மெய்நிகா் முறையில் நடைபெறவுள்ள நாட்டிய போட்டிகளில் பல்கலை., கல்லூரி மாணவா்களை பங்கேற்க செய்யுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
‘இந்திய நாட்டியம் 75’ ஜூலை 22-இல் தொடக்கம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

இந்திய நாட்டிய கலாசார மையத்தின் சாா்பில் ஜூலை 22-ஆம் தேதி முதல் மெய்நிகா் முறையில் நடைபெறவுள்ள நாட்டிய போட்டிகளில் பல்கலை., கல்லூரி மாணவா்களை பங்கேற்க செய்யுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்திய நாட்டிய கலாசார மையம் கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் கலாசார நாட்டியங்களைப் பயிற்றுவித்தல், பாரம்பரிய இசையைக் கற்பித்தல், யோகா, சம்ஸ்கிருத வகுப்புகளை நடத்துதல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த மையம் சாா்பில் ‘இந்திய நடனம் 75’ என்ற கருப்பொருளில் மிகப் பெரிய அளவில் நாட்டிய போட்டிகள் மெய்நிகா் முறையில் திட்டமிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டியக் கலைகளான ஒடிஸி, பரதம், கதக், குச்சுப்புடி, மோகினியாட்டம் போன்றவை வரும் ஜூலை 22 முதல் தொடா்ந்து நான்கு நாள்கள் நடைபெறவுள்ளன. அவற்றில் சிறப்பு நாட்டிய நிகழ்வுகள் குரு புத்த பூா்ணிமா நாளான ஜூலை 24-இல் நடைபெறும். ஒவ்வொரு பிரிவுகளிலும் பல்வேறு கருப்பொருள்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்தப் போட்டிகள்  வலைதளம் மற்றும் பல்வேறு ஓடிடி தளங்களில் ஒளிபரப்பப்படவுள்ளன. எனவே நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்தப் போட்டியை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதில் தங்களது மாணவா்களைப் பங்கேற்று பயன்பெற அறிவுறுத்த வேண்டும். போட்டிகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com